தொழில்நுட்பம்
சிறப்பான பேட்டரி, அட்டகாசமான சாஃப்ட்வேர்; ஆனால் கேமரா தரம்… சாம்சங் கேலக்ஸி ஏ56 போனின் செயல்திறன் எப்படி?
சிறப்பான பேட்டரி, அட்டகாசமான சாஃப்ட்வேர்; ஆனால் கேமரா தரம்… சாம்சங் கேலக்ஸி ஏ56 போனின் செயல்திறன் எப்படி?
சாம்சங் கேலக்ஸியின் எஸ் சீரிஸ் போன்கள் அனைத்தும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். ஆனால், கேலக்ஸி ஏ சீரிஸ் போன்களின் விலை தான் சற்று குறைவாக இருக்கும். குறிப்பாக, எஸ் சீரிசின் சில அம்சங்களும் ஏ சீரிசில் இரிக்கும். அந்த வகையில் மிட் ரேஞ்சில் சாம்சங் களமிறக்கி இருக்கும் கேலக்ஸி ஏ56 போனின் சிறப்புகள் குறித்து இதில் காணலாம். ஆங்கிலத்தில் படிக்கவும்: Samsung Galaxy A56 review: Solid performance in the mid-range segment வெளிப்புற ஃப்ரேம் உறுதியான வகையில் இந்த போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வந்த ஏ55 போனை விட ஒரு இன்ச் நீளமாக இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் அமலோடு டிஸ்பிளே இதில் வருகிறது. எனவே, வீடியோக்கள் பார்ப்பதற்கு, தகவல்களை படிப்பதற்கு சுலபமாக இருக்கிறது. Exynos 1580 சிப்செட் இயங்குதளுத்துடன் ஏ56 செயல்படுகிறது. மெசஜ் அனுப்புதல், சமூக ஊடகங்களை பயன்படுத்துதல், பாடல் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது மற்றும் கேம் விளையாடுவதற்கு என அனைத்து பயன்பாடுகளிலும் ஏ56 போன் இலகுவாக இருக்கிறது. One UI 7 என்ற சிறப்பம்சம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விலை உயர்வாக இருக்கும் ஆண்ட்ராய்ட் போன்களில் இது இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஏ.ஐ ஃபீச்சர்களும் இதில் உள்ளன.கேமராவை பொறுத்தவரை, 50 எம்.பி முதன்மை சென்சார், 12 எம்.பி அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 5 எம்.பி மேக்ரோ சென்சார் ஆகியவை பின்புறத்தில் உள்ளன. எனினும், ரூ. 40 ஆயிரத்திற்கு மேல் விலை இருக்கும் போனில் டெலிபோட்டோ லென்ஸ் இருந்திருக்கலாம். கேமரா செயல்பாடுகள் கூடுதல் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரியை சாம்சங் நிறுவனம் இந்த ஏ56 மாடலுடன் இணைத்துள்ளது. ரூ. 41,999 விலையில் மிட் ரேஞ்சில் சிறப்பான செயல்திறன், பேட்டரி பெர்ஃபார்மன்ஸ், தரமான பில்ட் குவாலிட்டி போன்ற அம்சங்களுடன் இருப்பதால், இந்த போனை சிலர் பரிசீலிக்கலாம். எனினும், அதிகமாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பவர்களுக்கு இந்த போன் ஏமாற்றம் அளிக்க கூடும். இதை விட சற்று கூடுதலாக பணம் கொடுக்க முடியும் என்று நினைப்பவர்கள் கேலக்ஸி எஸ்24 எஃப்.இ போனை பரிசீலிக்கலாம். இதேபோல், ஒன்பிளஸ் 13ஆர், விவோ வி50 மற்றும் ரியல்மி ஜிடி6 போன்ற போன்கள் இதே விலையில் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் சிந்தித்து தங்கள் தேவை அறிந்து போனை வாங்கலாம்.