இந்தியா
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் இடையே மீண்டும் நல்லுறவை ஏற்படுத்திய மோடி – பகவத் சந்திப்பு
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் இடையே மீண்டும் நல்லுறவை ஏற்படுத்திய மோடி – பகவத் சந்திப்பு
2004-ஆம் ஆண்டில் டெல்லியில் குளிர்காலம் நிலவியது. சில பத்திரிகையாளர்கள், பா.ஜ.க தலைவர் பிரமோத் மகாஜனிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். குறிப்பாக, அடல் பிஹாரி வாஜ்பாய் அல்லது லால் கிருஷ்ண அத்வானி ஆகிய இருவரில் கட்சியில் முக்கியமானவர் யார் என்று அவர்கள் கேள்வி கேட்டனர். 2004-ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாயின் அரசு அகற்றப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நிறுவப்பட்டது. ஆங்கிலத்தில் படிக்கவும்: PM Modi and RSS chief Bhagwat’s meeting steadies the boat, clears the air அந்த கேள்விக்கு, “சங் பரிவார் சங்கம் யாரை தேர்ந்தெடுக்கிறதோ அது தான் முக்கியம்” என்று மகாஜன் பதிலளித்தார்.இதைத் தொடர்ந்து, குஜராத் முதலமைச்சரான நரேந்திர தாமோதரதாஸ் மோடியை முன்னிறுத்துவதில் ஆர்.எஸ்.எஸ் தீவிரம் காண்பித்தது. ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத்தும் இதனை ஆமோதித்தார்.பகவத் மற்றும் மோடி இருவரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள். வரும் செப்டம்பர் மாதத்தில் இருவருக்கும் 75 வயது ஆகி இருக்கும். 2013-ல் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படுவதை உறுதி செய்வதில் பகவத் முக்கியப் பங்காற்றினார். தேர்தலில் மோடி வெற்றி பெற்ற பின்னர், மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இடையே கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டது.எனினும், சமீப ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க உறவில் பதற்றம் உருவாகியுள்ளது.நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு மோடி சமீபத்தில் சென்றது பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. பகவத்து சமாதானம் ஆவதற்காக மோடி அங்கு செல்லவில்லை. மாறாக, அவர் செல்வதற்கு முன் சமாதானம் செய்யப்பட்டது. இல்லையெனில் பிரதமராக 11 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு செல்லாத மோடி, சென்றிருக்க வாய்ப்பில்லை. 21 ஆண்டுகளுக்கு முன்பு பிரமோத் மகாஜன் செய்த மதிப்பீடு இன்னும் சரியாக இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது. எனினும், இதில் சில வேறுபாடுகள் இருக்கிறது. நாக்பூருக்குச் சென்றதன் மூலம், மோடி தனது அரசாங்கத்துடன், சங் தலைமை கொண்டிருந்த வேறுபாடுகளை சீர்செய்ய ஒரு சமரசக் குறிப்பைத் தேர்ந்தெடுத்தார். இதையொட்டி, சங் தலைமை மோடிக்கு மீண்டும் தனது ஆதரவை வழங்கியது. குறிப்பாக, ஒரு சக்திவாய்ந்த தலைமையாக உலகின் மிகப்பெரிய அரசியல்/தேர்தல் அமைப்பின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்து, சங்பரிவாரின் திட்டங்களை செயல்படுத்திய வகையில் மோடி தனித்து நிற்கிறார்.ஆர்.எஸ்.எஸ்-ன் பையாஜி ஜோஷி மோடியை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு பகவத் அவருக்காக காத்திருந்தார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் ஒன்றாக இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். பின்னர் இருவரும் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் மற்றும் அவரது வாரிசான எம்எஸ் ‘குருஜி’ கோல்வால்கர் ஆகியோரின் நினைவிடமான ஹெட்கேவார் ஸ்ம்ருதி மந்திரில் மரியாதை செலுத்தினர்.மோடியின் நாக்பூர் பயணம் தற்செயலாக, 2000 ஆம் ஆண்டில் நாக்பூருக்கு வாஜ்பாய் மேற்கொண்ட பயணத்திலிருந்து வேறுபட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் கே.சுதர்சன், அவரை வரவேற்க ஜூனியர் ஒருவரை அனுப்பினார். சுதர்சனுக்கும், வாஜ்பாய்க்கும் இடையே இருந்த பதற்றம், இளைய தலைவர்களுக்கு வழிவகை செய்ய வாஜ்பாய் மற்றும் அத்வானியை அவர் பகிரங்கமாக அழைத்தார். அவர் பிரதமராக பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ராஷ்டிரபதி பவனுக்கு பட்டியல் அனுப்பப்பட்ட பிறகும், வாஜ்பாய் தனது நிதியமைச்சரை (ஜஸ்வந்த் சிங்) மாற்றும்படி செய்தார்.இந்நிலையில், மோடியின் செயல்பாடு குறித்து பகவத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால், நேரடியாக இதனை வெளிப்படுத்தவில்லை. 2024 தேர்தலில், பா.ஜ.க-விற்கு ஆதரவு அளிக்காததன் மூலம் சங்பரிவார் சங்கம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதன் வெளிப்பாடாக 240 இடங்களில் பா.ஜ.க சரிவை சந்தித்தது.கடந்த ஆண்டு, நாக்பூரில் தேர்தல் பிரசாரத்தின் மத்தியில் மோடி இருந்தபோது, ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை அவர் சந்திக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அதற்குள் பா.ஜ.க-வின் உயர்மட்டத் தலைவர்கள், உத்தரப் பிரதேசத்தில் கட்சி சரியாகச் செயல்படவில்லை என்றும், பா.ஜ.க வேட்பாளர்களுக்காக சங்கம் தன்னைத்தானே முன்னிறுத்தவில்லை என்றும் உணர்ந்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ்-ன் ஆதரவு பா.ஜ.க-வுக்கு இனி தேவையில்லை என்றும், இப்போது அதன் சொந்த விவகாரங்களைக் கவனிக்கும் திறன் உள்ளது என்றும் கூறியிருந்தார்.சங்பரிவார் மற்றும் பா.ஜ.க தலைவர்களிடையே பரஸ்பர கவலைகளை நிவர்த்தி செய்ய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடந்த முக்கியமான சட்டமன்றத் தேர்தல்களிலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும், ஆர்.எஸ்.எஸ் தனது ஆதரவை வெளிப்படுத்தியது. மேலும், பாஜக மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. இது அரசாங்கத்தின் மீது மோடியின் பிடியை வலுப்படுத்தியது.நட்டாவிற்குப் பிறகு கட்சியை வழிநடத்துவது மற்றும் பாஜக அமைப்பிற்கு சுயேச்சையான கவனம் செலுத்துவது யார் என்பதுதான் சங்கத்தின் முக்கியமான கவலை. பிரதமர் நாக்பூர் சென்றது, பெயர் இறுதி செய்யப்பட்டதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அடுத்த பா.ஜ.க தலைவரை மோடி தேர்ந்தெடுப்பார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.மோடியின் மையப்படுத்தப்பட்ட செயல்பாடு குறித்து ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்து என்னவாக இருந்தாலும், சங்பரிவார்கள் ஒரு கூட்டு அணுகுமுறையை வலியுறுத்துகின்றனர். மோடிக்கும், பகவத்துக்கும் இடையிலான சந்திப்பைத் தூண்டியிருக்கும் மற்றொரு காரணி, வலதுசாரி சக்திகளின் எழுச்சி மற்றும் அவர்கள் இருவருக்கும் முன்வைக்கக்கூடிய சவால் என்று கருதப்படுகிறது.உண்மை என்னவென்றால், பகவத் மற்றும் மோடி ஆகியோர் ஒருவருக்கொருவர் தேவை. இந்த உணர்தலுக்கு இருவரும் வந்துள்ளனர்.- Neerja Chowdhury