இந்தியா

புதுச்சேரி – சென்னைக்கு காரில் சரக்கு கடத்தல்; மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார்

Published

on

புதுச்சேரி – சென்னைக்கு காரில் சரக்கு கடத்தல்; மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார்

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுக்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் போலீசார் நேற்று புதுச்சேரி–திண்டிவனம் சாலையில், தைலாபுரம் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற இனோவா காரை மடக்கி சோதனை செய்தனர்.அதில் புதுச்சேரி மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி சென்றது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் கார் ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் புதுச்சேரி முத்தியால்பேட்டை செயின்ட் ரொசாரியோ தெருவை சேர்ந்த  கவியரசன், 50; என்பதும், புதுச்சேரி பஸ் நிலையம் எதிரில் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு, சென்னையில் நண்பரிடம் கொடுப்பதற்கு கடத்திச்சென்றதும் தெரியவந்தது.அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 48 மதுபாட்டில்கள், 110 லிட்டர் புதுச்சேரி சாராய பாக்கெட்டுக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version