பொழுதுபோக்கு

மடியில் அமர சொன்ன இயக்குனர்; அதிர்ச்சியில் உறைந்த நடிகை

Published

on

மடியில் அமர சொன்ன இயக்குனர்; அதிர்ச்சியில் உறைந்த நடிகை

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா குப்தோ. இவர் தமிழில், தர்பார், ரோமியோ ஜூலியட், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.இந்நிலையில், சென்னையில் ஒரு படத்திற்கு ஆடிஷன் சென்றபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை நடிகை ஸ்ரேயா குப்தோ பகிர்ந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ” 2014 இல், நான் ஒரு இயக்குனர் அலுவலகத்திற்கு ஒரு ஆடிஷனுக்காக சென்றிருந்தேன். முன்பெல்லாம் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆடிஷனுக்கு நேரடியாக அழைப்பார்கள்.நான் என் அம்மாவுடன் அந்த ஆடிஷனுக்கு சென்றேன். நான் கேபினுக்குள் நுழைந்ததும், இயக்குனர் என்னிடம், ‘என் மடியில் உட்காரு என்றார். அப்போது என்ன பண்ணுவதென்றே எனக்கு தெரியவில்லை, மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version