இந்தியா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு; கேரளாவைச் சேர்ந்தவருக்கு மீண்டும் தலைமை பதவி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு; கேரளாவைச் சேர்ந்தவருக்கு மீண்டும் தலைமை பதவி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்) 24வது அகில இந்திய மாநாட்டில், முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் எம்.ஏ. பேபி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், சி.பி.எம் கட்சியின் தலைமைப் பதவியை கேரளாவைச் சேர்ந்தவர் இரண்டாவது முறையாக பெற்றுள்ளார் எனும் சிறப்பை பெற்றுள்ளது. இதற்கு முன், எம்.எஸ். நம்பூதிரிபாட் இந்த பதவியில் இருந்தார்.1954 ஏப்ரல் 5ஆம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பிறந்த எம்.ஏ.பேபி, மாணவராக இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டு, கேரளா ஸ்டூடன்ஸ் ஃபெடரேஷன் மற்றும் பின்னர் இளைஞர் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்குப் பின்னர், காலியாகிய இந்த பதவிக்கு, மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் புதிய பொலிட் பீரோ மற்றும் மத்திய குழுவுடன் இணைந்து எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார்.கட்சியின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இந்த பதவியைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.