இலங்கை

மோடிக்கு சஜித் வழங்கிய சிறப்பு பரிசு ; பரிசின் பெறுமதியை வெளிப்படுத்திய சஜித்

Published

on

மோடிக்கு சஜித் வழங்கிய சிறப்பு பரிசு ; பரிசின் பெறுமதியை வெளிப்படுத்திய சஜித்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது, நரேந்திர மோடிக்கு சஜித் பிரேமதாச சிறுத்தை புகைப்படம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

Advertisement

இந்த புகைப்படம் சஜித் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

அதில்,

வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த “ஐ-ஒன்” (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு புகைப்படத்தை, இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்களுக்கு கொழும்பில் வழங்கியது பெரும் கௌரவமாகும்.

Advertisement

ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பான விலங்கு — இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான சின்னமாகும்.

அதன் கவர்ச்சிகரமான நீல கண் சவால்களை எதிர்கொண்டு அதன் வாழ்க்கை பற்றிய நீண்ட கதையை சொல்கிறது — ஒருவேளை குளுகோமா (glaucoma), கெடரெக் (cataract), அல்லது ஏதாவது விபத்து காரணமாக இந்நிலை  ஏற்பட்டிருக்கலாம்,  ஆனால் அது காட்டில் பாதுகாப்பாக உறுதியாக இருப்பது விலங்குலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கான சின்னமாகும்.

எவ்வாறாயினும், துரதிஷ்டவசமாக இந்த சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக காணப்படவில்லை, மேலும் அது உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version