பொழுதுபோக்கு

உங்க முகம் ஏன் இப்படி இருக்கு? என்னாச்சு? குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி வைரல் வீடியோ!

Published

on

உங்க முகம் ஏன் இப்படி இருக்கு? என்னாச்சு? குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி வைரல் வீடியோ!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி நாய் சேகர் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பவித்ரா லட்சுமி தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு, அவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.மாடலிங் செய்து வந்த பவித்ரா லட்சுமி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. கோமாளியாக வந்த புகழுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பவித்ரா லட்சுமி வைல்டு கார் என்ட்ரி மூலம் மீண்டும் வந்து பைனலுக்கு முன்னறினார்.குக் வித் கோமாளி இவருக்கு நல்ல அறிமுகத்தையும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பையும் கொடுத்தது. மேலும் சினிமாவிலும் வாய்ப்பை பெற்று கொடுத்தது. அந்த வகையில் நடிகர் சதீஷ் நாயகனாக நடித்த நாய் சேகர் படத்தில், பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.A post shared by Pavithralakshmi (@pavithralakshmioffl)இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா,  அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பவித்ரா லட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவருக்கு என்ன ஆச்சு முகம் இப்படி ஆகிவிட்டதே என்று கேட்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version