சினிமா
கமல் ஜீவனாம்சத்தால் திவாலானாரா.. அப்ப்படிப்பட்டவர்!! வாணி கணபதி கொடுத்த அதிர்ச்சி..
கமல் ஜீவனாம்சத்தால் திவாலானாரா.. அப்ப்படிப்பட்டவர்!! வாணி கணபதி கொடுத்த அதிர்ச்சி..
நடிகர் கமல் ஹாசனின் சினிமா வாழ்க்கையை தாண்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கை பரபரப்பாக பேசப்பட்டு வரும். ஆரம்பத்தில் இருந்தே பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி வந்தார்.1975ல் ஒன்றாக நடித்த வாணி கணபதியுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்தனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை உறவில் திருப்தியடையவில்லை என்பதால் பல ஆண்டுகள் கழித்து 1988ல் பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் இருவரும் அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தனர்.பின் கமல் பேட்டியொன்றில், வாணிக்கு தான் அளித்த ஜீவனாம்சம் தன்னை கிட்டத்தட்ட திவாலாக்கியதாக கூறினார். இது வாணியை கோபப்படுத்தியது. பல ஆண்டுகளாக விவாகரத்து குறித்து மெளனமாக இருந்த வாணி, ஒரு நேர்காணலில் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.கமல் அவர்களின் திவால் அறிக்கையை கடுமையாக மறுத்துள்ளார் வாணி. என் தோல்வியுற்ற திருமணம் குறித்து நான் எப்போதும் பேசியதில்லை. ஏனென்றால் அதை ஒரு தனிப்பட்ட விஷயமாக கருதினேன். ஆனால் கமலின் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானது. 28 ஆண்டுகளாக நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டோம். நான் எப்போது இதுபோன்ற சேற்றை எறிவதிலிருந்து விலகியே இருந்தேன். அது மிகவும் தனிப்பட்ட விஷயம்.கமல் ஏன் இப்படி வெறிப்பிடித்தவர் போல் நடந்துக்கொள்கிறார். கமலிடம் இருந்து பெறும் ஜீவனாம்சத்தால் தான் சொத்து வந்தது என்று மக்கள் நினைத்ததால் அதிர்ச்சியடைந்தேன். என் கடின உழைப்பின் மூலம் என் வெற்றியை நான் அடைந்தேன். ஜீவனாம்சம் என்பது விவாகரத்து ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. நாங்கள் பகிர்ந்துக்கொண்ட பிளாட்டில் இருந்து பயன்படுத்திய உபகரணங்களை கமல் எனக்கு கொடுக்க மறுத்துவிட்டார்.அப்படிப்பட்ட ஒருவரிடம் நான் என்ன எதிர்ப்பார்க்க முடியும்?. ஜீவனாம்சம் செலுத்தி தான் திவாலானேன் என்று கமல் கூற்று மிகப்படுத்தப்பட்டது. உலகின் எந்த சட்ட அமைப்பும் யாரையும் திவாலாக்கும் படி ஜீவனாம்சம் வழங்க கட்டாயப்படுத்தாது. உலகின் எந்த நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் யாரையாவது திவாலாக்கும் நிலைக்கு தள்ளியுள்ளதா? அதை படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் திருமணத்தில் இருந்து வெளியேறியபோது அவரது அகங்காரம் புண்பட்டிருக்க வேண்டும், ஆனால் நானும் நிறைய கஷ்டப்பட்டேன். அவர் பொருளாதார நெருக்கடி என்று சொல்லி முடித்திருக்கலாம் என்று வாணி கணபதி தெரிவித்துள்ளார்.