இலங்கை

கோசல நுவானின் மரணத்தின் பின் வெற்றிடமாகியுள்ள எம்.பி. பதவி!

Published

on

கோசல நுவானின் மரணத்தின் பின் வெற்றிடமாகியுள்ள எம்.பி. பதவி!

தேசிய மக்கள் சக்தி (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் மறைவைத் தொடர்ந்து ஒரு எம்.பி. பதவி வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 66(a) பிரிவின் விதிகளின்படி,

Advertisement

2025 ஏப்ரல் 6 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வெற்றிடம் குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவித்துள்ளார்.

1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தால் திருத்தப்பட்ட, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 64(1) இன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர நேற்று (6) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

Advertisement

கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 38 வயதில் அவர் காலமானார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version