இலங்கை

தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Published

on

தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

 தபால் சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று பிற்பகல் அல்லது நாளை (08) ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version