இலங்கை

தொலைபேசி அழைப்பால் பறிபோன ஆசிரியரின் பெரும் தொகை பணம்

Published

on

Loading

தொலைபேசி அழைப்பால் பறிபோன ஆசிரியரின் பெரும் தொகை பணம்

பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர் இவ்வாறான பணமோசடி சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

Advertisement

ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின்  பரிசளிப்புக்கு குறித்த ஆசிரியை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வந்த உண்மையென நம்பி தனது  வங்கி கணக்கிலக்கத்தையும், தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் அந்த ஆசிரியர் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலை வழங்கிய சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் மீளப் பெறப்பட்டதாக தொலைபேசி குறுந்தகவல் அவருக்கு வந்துள்ளது.

பதுளை பகுதியில் ஆசிரியர்களை இலக்கு வைத்து இவ்வாறு பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Advertisement

பண்டிகை காலத்தில் இவ்வாறான மோசடிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் தமது பாதுகாப்பு தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version