இலங்கை

பறிபோகும் தேசபந்து தென்னகோனின் பதவி ; நாடாளுமன்றில் விசேட பிரேரணை

Published

on

பறிபோகும் தேசபந்து தென்னகோனின் பதவி ; நாடாளுமன்றில் விசேட பிரேரணை

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை  (08) நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்கு சமர்ப்பித்துள்ள பிரேரணை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகருக்கு பிரேரணை கையளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரேரணையில் அவரது தவறான நடத்தை, பதவியை தவறான முறையில் பயன்படுத்தியமை, அவர் தனது பொலிஸ்மா அதிபர் பதவியை பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை அவரது பதவிக்காலத்தில் முறையற்ற விதத்தில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

2022ஆம் ஆண்டும் 5ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயர் பதவியில் இருக்கின்ற அரச அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்றுவதற்கான யோசனையாகவே இந்த பிரேரணை நாளைய தினம் நாடாளுமன்றததுக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக இரண்டாம் வாசிப்பு மீதான பிரேரணையாகவே நாளை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்ட இருக்கிறது என குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version