இலங்கை

பாரதப்பிரதமர் இலங்கை வருகை தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம்!

Published

on

பாரதப்பிரதமர் இலங்கை வருகை தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்கு  கால அவகாசம்  போதாமையினால் குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இருந்தும்  எல்லைதாண்டும் இந்திய கடற்றொழிலாளர் தொடர்பான எமது வலியுறுத்தல்கள் பாரதப் பிரதமரிடம் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது என்றும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்

Advertisement

தெரிவித்துள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது ஏனைய பல தமிழ் அரசியல் தரப்பினர் அவரை சந்தித்திருந்தனர். அந்த வகையில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் பங்குபற்றாமை குறித்து ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version