இலங்கை

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Published

on

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை ஆரம்பம்

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கடந்த 4 ஆம் திகதி காலை கத்திக்குத்து காயங்களுடன் மரணித்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் மற்றும் உள்ளக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisement

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காக நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஏற்கனவே அனைத்து விசாரணைகளையும் விரைவாக முடித்து சம்பந்தப்பட்ட குழுவிடம் அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version