இலங்கை

விபச்சார விடுதி முற்றுகை; பெண்களுடன் சிக்கிய நபர்

Published

on

விபச்சார விடுதி முற்றுகை; பெண்களுடன் சிக்கிய நபர்

 விபச்சார விடுதியான்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த ஒரு சந்தேக நபரும், விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி – தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி இவ்வாறு முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

குறித்த கைது நடவடிக்கை நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் எனவும் அதேவேளை கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 35 மற்றும் 48 வயதுடைய தெவனகல மற்றும் முருதலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் குறித்து கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version