வணிகம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு; செவ்வாய்க்கிழமை முதல் விலை உயர்வு அமல்

Published

on

Loading

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு; செவ்வாய்க்கிழமை முதல் விலை உயர்வு அமல்

சமையல் எரிவாயு அல்லது எல்.பி.ஜி விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எண்ணெய் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்களன்று தெரிவித்தார்.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்உஜ்வாலா மற்றும் பொதுப் பிரிவு வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.பொது பயனர்களுக்கு 14.2 கிலோ எல்.பி.ஜி சிலிண்டரின் விலை ரூ.803 லிருந்து ரூ.853 ஆகவும், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.503 லிருந்து ரூ.553 ஆகவும் அதிகரிக்கும்.பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு தலா ரூ. 2 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version