இலங்கை

NPP எம்பி மரணம்; நாடாளுமன்றில் பதவி வெற்றிடம்

Published

on

NPP எம்பி மரணம்; நாடாளுமன்றில் பதவி வெற்றிடம்

  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது பாராளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தின் பதில் பொது செயலாளர் சமிந்த குலரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

Advertisement

கோசல நுவான் நேற்று (6) திடீர் மாரடைப்பு காரணமாக தமது 38 வயதில் காலமானார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version