பொழுதுபோக்கு

அப்பா நடிகர் திடீர் மரணம்: அடுத்த ரத்தினவேல் யார்? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்!

Published

on

அப்பா நடிகர் திடீர் மரணம்: அடுத்த ரத்தினவேல் யார்? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்!

ஸ்ரீதரின் திடீர் மறைவு.. வள்ளியின் வேலன் சீரியலில் நடந்த மாற்றம் – இனி ரத்தினவேலாக நடிக்க போவது யார் தெரியுமா?சின்னத்திரையில் திருமணம் சீரியல் மூலம் என்டரி ஆன ஜோடி சித்து – ஸ்ரேயா அச்சன். இந்த சீரியலில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின், ஸ்ரோயா ஜீ தமிழ் சீரியலிலும், சித்து விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்திருந்தனர். இந்த இரு சீரியலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்த நிலையில், இருவரும் அடுத்து எந்த சீரியலில் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜீ தமிழில் தொடங்கிய வள்ளியின் வேலன் சீரியலில் சித்து – ஸ்ரேயா இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். திங்கள் முதல் சனி  வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ரத்தினவேல் என்ற முக்கிய கேரக்டரில், ஆரம்பத்தில் சாக்ஷி சிவா நடித்து வந்தார். ஒரு கடத்தில் திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதால், அடுத்து அவருக்கு பதிலாக பல சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்ரீதர் நடிக்க தொடங்கினார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீதர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணடைந்தார். இவரது மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது வள்ளியின் வேலன் சீரியலில் ரத்தினவேலாக இனி அறிவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த கிரிஷ் என்பவர் நடிக்க இருப்பதாகவும் விரைவில் இவரது காட்சிகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version