இந்தியா

கர்நாடகாவில் பசுவுக்கு வளைகாப்பு செய்து 500 பேருக்கு விருந்து வைத்த தொழிலதிபர்

Published

on

கர்நாடகாவில் பசுவுக்கு வளைகாப்பு செய்து 500 பேருக்கு விருந்து வைத்த தொழிலதிபர்

கர்நாடகாவைச் சேர்ந்த தினேஷ் என்ற தொழிலதிபர் தாம் வளர்த்து வந்த பசு தாய்மை அடைந்ததை அடுத்து அதற்கு இந்து சமய வழக்கத்தின்படி வளைகாப்பு நிகழ்வை சிறப்பாக நடத்தி உள்ளார்.

இதற்காக, 500 பேருக்கு விருந்து வைத்து அசத்தினார் தினேஷ்.

Advertisement

இவர் தனது வீட்டில் ஏராளமான பசுக்களையும் காளைகளையும் வளர்த்து வருகிறார். அவற்றுள் கவுரி என்ற பசுவும் அடங்கும். 

ஹள்ளிகார் கிராமத்தில் வளர்க்கப்பட்டு வந்த இந்த கர்ப்பிணிப் பசு, கர்ப்பமடைந்தது. இதையடுத்து, பசுவுக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தார்.

அதன்படி, பெரிய திருமண மண்டபத்தில், பசுவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்து சமய சம்பிரதாயப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது. பெண்களுக்கு நடப்பது போன்று அனைத்து சடங்குகளும் நடந்தன.

Advertisement

கவுரி பசுவை அலங்கரித்து, பூ மாலைகள் அணிவித்தனர். வெற்றிலை, பச்சை நிற வளையல்கள், அட்சதை, தேங்காய், பழங்கள் வைத்து ஆரத்தி எடுத்தனர்.

பின்னர் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஐந்து வகையான சாதம் உட்பட பல உணவு வகைகளுடன் கூடிய விருந்து பரிமாறப்பட்டது.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version