பொழுதுபோக்கு
கெத்து மனைவி ஆடிய குத்து டான்ஸ்: வைப் செய்த சூர்யா பாடல்; வீடியோ வைரல்!
கெத்து மனைவி ஆடிய குத்து டான்ஸ்: வைப் செய்த சூர்யா பாடல்; வீடியோ வைரல்!
லப்பர் பந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய சுவாசிகா, கெத்து மனைவி என்று அழைக்கப்படும் நிலையில், தற்போது இவர் சூர்யா பட பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.கேரளா மாநிலத்தில் பிறந்த நடிகை சுவாசிகா, கடந்த 2009-ம் ஆண்டு, வைகை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த லப்பர் பந்து படம் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. இந்த படத்தில் கெத்து கேரக்டருக்கு மனைவியாக நடித்திருந்தார் சுவாசிகா.தமிழ் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சுவாசிகா, தற்போது சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாமல், மலையாளத்தில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள நடிகை சுவாசிகா, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.அந்த வகையில் தற்போது சுவாசிகா ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் வரும் கனிமா என்ற பாடல், பெரிய அளவில் வரவேற்பை பெற்று பலரும் ரீல்ஸ் வீடியோ செய்யும் அளவுக்கு ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் இந்த பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே போட்ட டான்ஸ் டெப்புகள், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.A post shared by Swaswika (@swasikavj)இந்த பாடலுக்கு நடனமாடியுள்ள நடிகை சுவாசிகா, பூஜா ஹெக்டோவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு நடனத்தில் அசத்தியுள்ளார். சுவாசிகா என்ற பெயர் மறந்து கெத்து மனைவி என்று அழைக்கப்படும் நடிகை சுவாசிகா தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கொத்து மனைவி சூப்பர் என்று பதிவிட்டு வருகின்றனர்.