இலங்கை
சனத்தொகை 21,763,170
சனத்தொகை 21,763,170
இலங்கையின் தற்போதைய சனத்தொகை இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சனத்தொகை தொடர்பில், ‘தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால்’ நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, அந்த அறிக்கையிலேயே, நாட்டின் தற்போதைய சனத்தொகை இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 லட்சம் பேரால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.