இலங்கை
சிறையில் விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படாது ; மரண தண்டனை கைதியான முன்னாள் எம்.பிக்கு உத்தரவு
சிறையில் விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படாது ; மரண தண்டனை கைதியான முன்னாள் எம்.பிக்கு உத்தரவு
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படாது என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், சிறைச்சாலையின் வைத்தியசாலையில் உள்ள கைதிகளுக்கு வெளியிலிருந்து உணவுகளை வழங்குதல் மற்றும் விசேட வசதிகளை ஏற்பாடு செய்தல் சட்டத்திற்கு எதிரானவை ஆகும்.
எனவே, துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படாது என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.