உலகம்

போர்ச்சுகல் சென்ற இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு

Published

on

போர்ச்சுகல் சென்ற இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கு பயணமாகியுள்ளார்.

இன்று முதல் வரும் 10ம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு, முதல்கட்டமாக இன்று போர்ச்சுகல் சென்றடைந்துள்ளார்.

Advertisement

பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் ஜனாதிபதியை போர்ச்சுகலில் உள்ள இந்திய தூதர் புனீத் ஆர் குண்டல் மற்றும் இந்தியாவில் உள்ள போர்ச்சுகல் தூதர் ஜோவா ரிபேரோ டி அல்மீடியா ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு தனது 2 நாட்கள் பயணத்தை அங்கு முடித்து கொண்டு அடுத்தப்படியாக சுலோவாகியாவுக்கு செல்கிறார். அங்கு அவர் சுலோவாகியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ரிச்சர்ட் ராசி ஆகியோரை சந்திக்க உள்ளார். 

போர்ச்சுகல் அதிபரின் அழைப்பை ஏற்று 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு செல்லும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார். 

Advertisement

முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கடந்த 1998ம் ஆண்டில் போர்ச்சுகல் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version