தொழில்நுட்பம்

வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த டாப் 5 எஸ்.யூ.வி கார்கள்; முழு பட்டியல் இதோ!

Published

on

வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த டாப் 5 எஸ்.யூ.வி கார்கள்; முழு பட்டியல் இதோ!

கடந்த சில மாதங்களாக பெரும்பாலான மக்கள் எஸ்.யூ.வி கார்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்.யூ.வி விற்பனையின் எண்ணிக்கை மூலமாக இதனை அறிந்து கொள்ள முடிகிறது. அதன்படி, அதிகப்படியாக விற்பனையான எஸ்.யூ.வி கார்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா இடம்பெறுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 18,059 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதன் எண்ணிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக அதன் இடத்தை ஹூண்டாய் நிறுவனம் பெற்றுள்ளது.க்ரெட்டாவைத் தொடர்ந்து அதற்கு அடுத்த இடத்தில் டாடா பன்ச் இடம்பெறுகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் 17,714 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. பெட்ரோல், சி.என்.ஜி மற்றும் ஈ.வி என அனைத்து வடிவங்களிலும் இது கிடைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க இடத்தை இது பெறுகிறது.இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் நான்காவது இடத்தில் டாடா நெக்ஸான் காரும் வருகின்றன. அதனடிப்படையில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மாடல்     16,546 என்ற எண்ணிக்கையிலும், டாடா நெக்ஸான் மாடல் 16,366 எண்ணிக்கையிலும் விற்பனை ஆகி இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க வகையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா-வின் விற்பனை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி வகையிலும், டாடா நெக்ஸான் பெட்ரோல், டீசல், சி.என்.ஜி மற்றும் ஈ.வி வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது.ஐந்தாவது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் உள்ளது. இது மொத்தமாக 13,913 என்ற அளவில் விற்பனை ஆகி இருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டை கணக்கிடும் போது இதன் எண்ணிக்கை 8 சதவீதம் சரிந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version