இலங்கை

அந்தரங்க புகைப்படங்களை வெளியிடபோவதாக அச்சுறுத்திய இருவருக்கு நேர்ந்த கதி

Published

on

அந்தரங்க புகைப்படங்களை வெளியிடபோவதாக அச்சுறுத்திய இருவருக்கு நேர்ந்த கதி

சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விநியோகிப்பதாகக் கூறி தனிநபர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு-கோட்டையில், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதாக மிரட்டி ரூ.222,000 பெற்ற 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அதேவேளை வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதன் அடிப்படையில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த சந்தேக நபரை நேற்று மதியம் பொலிஸார் கைது செய்தனர்.

வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புவதாக மிரட்டிய குற்றச்சாட்டில் பண்டாரகமவைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 2025 ஜனவரியில் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்று கிடைத்தது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் நேற்று கஹதுடுவ பகுதியில் கைது செய்யப்பட்டார்.

Advertisement

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version