உலகம்
அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதித்த சீனா!
அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதித்த சீனா!
அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84% வரி விதித்துள்ளதாக சீன நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது நாளை (10) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன இறக்குமதிகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 104% வரிகள் இன்று (09) அமலுக்கு வருகின்றன.
அதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 84% வரி விதிக்கப்படுவதாக சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனா “நம்பகமற்ற நிறுவனங்கள்” என்று முத்திரை குத்திய நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டது.
இதில் ஆறு அமெரிக்க வணிகங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் கூறுகிறது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை