இலங்கை
அமெரிக்க வரிகள் தொடர்பில் ட்ரம்புக்கு ஜனாதிபதி கடிதம்!
அமெரிக்க வரிகள் தொடர்பில் ட்ரம்புக்கு ஜனாதிபதி கடிதம்!
அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரிகள் தொடர்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடிதம் அனுப்பியுள்ளார் என்று பிரதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
அமெரிக்காவின் வர்த்தகப் போரை எதிர்கொள்வதற்கு, ஜனாதிபதி அநுரவின் தலைமையில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரவால், அமெரிக்க அதிபருக்குக் கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் கிடைத்துள்ளதை அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், அமெரிக்கப் பொருள்களுக்கு இலங்கை விதிக்கும் வரிகள் தொடர்பிலும் நாம் மதிப்பாய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம் – என்றார்.