இலங்கை
அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைப்போம்
அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைப்போம்
முயற்சிகள் கைவிடப்படவில்லை; அநுர அரசாங்கம் அறிவிப்பு
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவோம். அதற்கான முயற்சிகள் தொடர்கின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
அர்ஜுன் மகேந்திரனை பிடியாணை ஊடாக நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியை நாம் இன்னும் கைவிடவில்லை. இராஜதந்திர ரீதியில் இவ்விடயத்தை கையாள வேண்டியுள்ளது. சிங்கப்பூரின் சட்டங்கள் தொடர்பில் கவனத்திற் கொள்ளவேண்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், நாம் முயற்சியைக் கைவிடவில்லை – என்றார்.