உலகம்
காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல்- காசா இடையிலான 7 வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.
தங்கள் நாட்டிற்கான பாதுகாப்பு பகுதியை அதிகரிப்பதற்காக தற்போது தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 23 பேர் உயிரிழந்ததாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அதிகமாக வாழும் நகர்ப்புற பகுதிகளில் ஹமாஸ் பதுங்கியுள்ளனர் என்று ஹமாஸ் அமைப்பினர் மீது குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரில் காசாவில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை