டி.வி
காதலிக்கு வந்த வரன்: ஹீரோ என்ன செய்ய போகிறார்? கெட்டிமேளம், அண்ணா சீரியல் அப்டேட்
காதலிக்கு வந்த வரன்: ஹீரோ என்ன செய்ய போகிறார்? கெட்டிமேளம், அண்ணா சீரியல் அப்டேட்
இசக்கிக்கு மருந்து கொடுக்கும் பாக்கியம்.. முத்துப்பாண்டி போட்ட கண்டிஷன் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வைஜெயந்தி வீரா ஒரு FIR-ஐ போட்டு போலீஸ் வேலைக்கு வர முடியாதபடி செய்வதாக சொல்லிய நிலையில் இன்று, கௌதம் அவளை வேலைக்கு வராமல் பண்ணா மட்டும் போதுமா? அதோட விட கூடாது என கோபப்படுகிறான். பிறகு பாட்டி வைஜெயந்தி உள்ளே சென்றதும் நீ எதுக்கு உன் அம்மா பெர்மிஷனுக்காக காத்துகிட்டு இருக்க.. நீ பண்ண வேண்டியதை பண்ணு, நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறார்.அடுத்து பாக்கியம் சண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கிக்கு மருந்து கொடுப்பது பற்றி பேசுகிறாள். அதுக்காக வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்ல மருந்து கொடுக்கிறதா இருந்தா இங்கே கொடுங்க என்று முத்துப்பாண்டி சொல்கிறான். பாக்கியம் அது முறை இல்ல.. வீட்டிற்கு கூட்டிட்டு போய் தான் மருந்து கொடுக்கணும் என்று சொல்கிறாள். முத்துப்பாண்டி உன் புருஷனை நம்பி எல்லாம் இசக்கியை அனுப்ப முடியாது என்று சொல்ல இசக்கி தனக்கும் இதெல்லாம் நடக்கணும்னு ஆசையா இருப்பதாக சொல்கிறாள்.இதனால் முத்துப்பாண்டி நாளைக்கு காலையில் 4 மணிக்கு நானே அவளை வீட்டிற்கு கூட்டிட்டு வரேன் என்று சொல்லி அடுத்த நாள் அழைத்து செல்ல பாக்கியம் தலைக்கு குளிக்க வைத்து சாம்பிராணி போட்டு மருந்து கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.முருகனுக்குள் மலரும் காதல், துளசிக்கு கல்யாணமா? வெற்றி செய்யப் போவது என்ன? கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டி மேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கேசவன் கடை திறப்பு விழாவில் வெற்றியின் பெற்றோருக்கு முன்னுரிமை கொடுக்க லட்சுமி வருத்தம் அடைந்த நிலையில் இன்று, துளசி மற்றும் தியாக என இருவரும் ரோட்டில் நடந்து செல்ல அந்த வழியாக வந்து வெற்றி வாங்க நான் உங்களை வீட்டில் டிராப் பண்றேன் என்று கூப்பிட துளசி உங்க உதவி தேவையில்லை என்று உதாசீனம் செய்கிறாள். அதைத்தொடர்ந்து வெற்றி லட்சுமிக்கு போன் போட்டு அக்கா வர வழியில துளசியையும் தியாவையும் பார்த்தேன். வாங்க வீட்ல நானே விட்டுறேன்னு கூப்பிட்டா வர மாட்றாங்க நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க என்று சொல்லி போனை கொடுக்க லட்சுமி வெற்றியுடன் வர சொல்ல இருவரும் அவனுடன் கிளம்பி வருகின்றனர்.வெற்றி நேராக ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்று தியாவிற்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கிறான். துளசிக்கும் வாங்கிக் கொடுக்க அவள் வேண்டாம் என்று மறுக்க இது நான் செஞ்சது கிடையாது கடைக்காரர் செய்தது என சொல்லி சாப்பிட வைக்கிறான். அடுத்ததாக லட்சுமி கடை திறப்பு விழாவில் நடந்ததையே நினைத்து வருத்தத்தில் இருக்க சிவராமன் அவன் ஏதோ ஒரு பிசினஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டோம் அது இப்போ நடந்துருச்சு அதுவே போதும் என ஆறுதல் சொல்கிறார்.அடுத்த நாள் காலையில் பாலமுருகன் டிப் டாப்பாக ரெடியாகி இன்னொரு டப்பா எக்ஸ்ட்ராக சாப்பாடு கட்ட சொல்லி வேலைக்கு கிளம்ப லட்சுமி இவன் யாருக்கு சாப்பாடு கொண்டு போறான் என பாலோ செய்கிறாள். பாலமுருகன் துர்காவுக்கு சாப்பாடு கொடுக்க, லட்சுமி அதை பார்த்து அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமைந்த சந்தோஷம் தான் என நினைக்கிறாள். அடுத்ததாக வெற்றி லட்சுமியை பார்க்க வீட்டுக்கு வர துளசி எதுக்கு வந்தீங்க என்று கோபப்படுகிறாள்.வெற்றி தியாவுக்காக வாங்கி வந்த மருந்தை எடுத்துக் கொடுக்க துளசி வேண்டாம் என மறுக்கிறாள். அடுத்ததாக வெற்றி கோவிலுக்கு வந்து லட்சுமி பார்த்துவிட்டு நீங்க இங்கேயே இருங்க.. நான் சாமி கும்பிட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று உள்ளே செல்ல சாமியார் ஒருவர் துளசிக்கு ஒரு வரன் வந்திருப்பதாக சொல்கிறார். பிறகு வீட்டுக்கு வந்த லட்சுமி சாமியார் சொன்ன விஷயத்தை சொல்ல சிவராமன் மாப்பிள்ளை ஆக வருபவர் தியாவையும் சேர்த்து ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும் என சொல்கிறார்.அடுத்து மகேஷ் அஞ்சலிக்கு போன் செய்து ரெடியா இரு பார்ட்டிக்கு போகலாம் என்று சொல்ல அந்த சந்தோஷமாக ரெடியாக தொடங்குகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.