சினிமா

தமிழை வளர்க்க இலக்கியவாதிகள் அரசியலுக்குத் தேவை..! மன்சூர் அலிகானின் உருக்கமான பகிர்வு!

Published

on

தமிழை வளர்க்க இலக்கியவாதிகள் அரசியலுக்குத் தேவை..! மன்சூர் அலிகானின் உருக்கமான பகிர்வு!

அரசியல் மற்றும் இலக்கிய உலகின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மறைவு, தமிழரசிற்கும் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது. அந்தவகையில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த மன்சூர் அலிகான் நேரில் சென்று தனது ஆழ்ந்த வருத்தங்களைப் பகிர்ந்துள்ளார்.மன்சூர் அலிகான் கூறியதாவது , “குமரி ஆனந்தன் போன்ற இலக்கியப் புலமை கொண்டவர்களை இன்று காண முடியாது. அவர் பேசிய இலக்கியத்தின் நுணுக்கம் மற்றும் சிறப்பான வார்த்தைகளை விவரிக்க இயலாது.” எனக் கூறியுள்ளார்.மேலும் அவர், “ஆட்சி அதிகாரங்களில் இலக்கியவாதிகள் மற்றும் தமிழ் புலவர்கள் நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் தமிழ் நெறியாக வாழும் என்றதுடன் இப்பொழுது அப்படிப்பட்ட ஒரு மாமனிதரை இழந்திருக்கின்றோம் என்பது மிகுந்த வேதனையான ஒன்று” என்றார்.மன்சூர் அலிகான், “குமரி ஆனந்தன் போன்றோர், தமிழின் பெருமையை உலகமெங்கும் எடுத்துச் சென்றவர்கள். அவருடைய பங்களிப்பு தமிழின் வளர்ச்சிக்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் கூறிய ஒவ்வொரு சொற்களும் வாழ்வின் உண்மைத் தருணங்களையும், தமிழின் இனிமையையும் பிரதிபலித்தது.” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version