உலகம்

தென் கொரியாவில் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல்

Published

on

தென் கொரியாவில் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல்

தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக அப்போதைய அதிபர் யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

Advertisement

அவரது பதவி நீக்கத்தை அந்த நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டும் கடந்த வாரம் உறுதி செய்தது.

தென்கொரிய அரசியலமைப்பின்படி அதிபர் பதவி நீக்கம் செய்யப்படும்போது அடுத்த 2 மாதங்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும்.

எனவே அதிபர் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருகிற ஜூன் மாதம் 3ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ அறிவித்துள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version