நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 09/04/2025 | Edited on 09/04/2025
தனியார் தொலைக்காட்சியில் பிரபல நகைச்சுவை தொடரான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் நடித்தவர் ஆண்டனி. அதன் மூலம் கவனம் பெற்று ‘லொள்ளு சபா ஆண்டனி’ என அழைக்கப்பட்டார். இதையடுத்து திரைப்படங்களில் சந்தானத்துடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து வந்தார்.
இதனிடையே சமீப காலமாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இவரது மருத்துவ செலவுக்கு சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட சொள்ளு சபா குழுவினர் சிலர் மற்றும் சந்தானம் படத்தின் இயக்குநர்கள் சிலர் உதவி வந்தனர். மேலும் அவரது தனிப்பட்ட சில விஷயங்களுக்கும் உதவினர்.
இந்த நிலையில் ‘லொள்ளு சபா ஆண்டனி’ காலமாகியுள்ளார். உடல் நிலை மோசமடைந்ததால் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவரது மறைவு லொள்ளு சபா குழுவினர் உள்ளிட்ட திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.