இந்தியா

பணி நிரந்தரம் செய்யக் கோரி புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published

on

பணி நிரந்தரம் செய்யக் கோரி புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

புதுச்சேரியில், போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் சார்பில் உள்ளூர் மற்றும் சென்னை, பெங்களூரு, குமுளி, நாகர்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சாலை போக்குவரத்து கழகத்தில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர்.இதனிடையே, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை ஊழியர்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஒப்பந்த ஊழியர்களுக்கு, நிரந்த பணியாளர்கள் ஆதரவு அளித்துள்ளதால், இன்று காலை முதல் புதுச்சேரி அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவில்லை. இந்நிலையில், அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தனியார் மற்றும் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version