இலங்கை
பதில் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோனை விசாரிக்கக் குழு!
பதில் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோனை விசாரிக்கக் குழு!
நாடாளுமன்றில் தீர்மானம்
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறப்புக் குழு அமைக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென்னக்கோனை பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பைக் கோரினார். இந்த வாக்கெடுப்பு 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. எவரும் எதிராக வாக்களிக்கவில்லை.
தென்னக்கோனுக்கு எதிராக விசாரணைக்குழு அமைக்கும் விடயத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அவர் தொடர்பான வழக்கொன்று நிலுவையில் உள்ளது. ஆதலால், இந்த வழக்கை வேறு விதமாகக் கையாண்டிருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.