இலங்கை

பிரியாணிக்காக தாய் எடுத்த விபரீத முடிவு ; நிர்கதியாக நிற்கும் குழந்தைகள்

Published

on

பிரியாணிக்காக தாய் எடுத்த விபரீத முடிவு ; நிர்கதியாக நிற்கும் குழந்தைகள்

வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீனா (வயது36).

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

Advertisement

ரமேஷ் திருக்காஞ்சி பகுதியில் வீடு ஒன்று வாங்கி அதனை சரிசெய்து வருகிறார். அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மீனா சமையல் செய்யாமல் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து ரமேஷ் மதியம் 1 மணியளவில் வில்லியனூருக்கு சென்று பிரியாணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர், பிற்பகல் 3 மணிக்கு மேல் பிரியாணியுடன் வந்துள்ளார்.

இதனால் மீனா கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தார்.

Advertisement

ரமேஷ் வெளியே சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது மின் விசிறியில் புடவையில் மீனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரை மீட்டு வில்லியனூர் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும்  அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version