இந்தியா
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் சீதா கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் சீதா கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று (ஏப்ரல் 9) சீதா கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.ராம நவமி நிகழ்வு நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சீதா கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரின் காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இன்றைய தினம் சீதா கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு ஏராளமான பெண் பக்தர்கள் சீர்வரிசையுடன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.