இலங்கை

மன்னாரில் “அருவி ஆறு சுற்றுலா வலயம்” திறந்துவைப்பு

Published

on

மன்னாரில் “அருவி ஆறு சுற்றுலா வலயம்” திறந்துவைப்பு

  மன்னார் , மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட ‘அருவி ஆறு சுற்றுலா வலயம்’ நேற்று (8) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது அருவி ஆறு சுற்றுலா வலய பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனையடுத்து, தொங்கு பாலமும் திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் பகுதிக்கு வடக்கு மற்றும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம், அருவி ஆறு ஆகியவற்றை சென்று பார்வையிடுவது வழமையானது.

அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு இந்த சுற்றுலா வலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த நிகழ்வில் வட மாகாண சுற்றுலாத்துறை தலைவர் பத்திநாதன் மற்றும் வட மாகாண சுற்றுலாத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், நானாட்டான் பிரதேச சபை செயலாளர் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version