இலங்கை
மாடு கடத்தல் மூவர் கைது!
மாடு கடத்தல் மூவர் கைது!
20 மாடுகள் மீட்பு
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மாடுகளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதிக் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், லொறி ஒன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்தியபோதே, இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதுடன், 20 மாடுகளும் மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையின்போது, மல்லாவி பகுதியில் இருந்து குருநாகல் பகுதிக்கு அந்த மாடுகள் கடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.