இலங்கை

யாழில் களமிறங்கும் NPP யின் வேட்பாளர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை

Published

on

யாழில் களமிறங்கும் NPP யின் வேட்பாளர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை

நீண்ட காலங்களாக தமிழரசுக் கட்சியில் செயற்படும் சாணக்கியன் முன்னர் ஒரு சில காலம் மஹிந்த தரப்போடு இருந்ததை மிகப் பெரிய குற்றமாக நாடாளுமன்றம் வரை விவாதிக்கின்றனர்.

மஹிந்தவை ஆட்சிக்கு ஏற்றி அழகு பார்த்த கட்சி தான் JVP ஆனால் காலப் போக்கில் அவர்களுக்குள்ளும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. அதில் எமக்கு கொள்கை முரண்கள் இருந்தது.

Advertisement

ராஜபக்ச பக்கம் இருந்தாலே அது ஒரு மாபெரும் கொடூரக் குற்றம் எனக் கருதும் NPP, சென்ற ஜனாதிபதி தேர்தலில் நாமலுக்காக மேடை ஏறி வாக்குக் கேட்ட பெண் ஒருவரை யாழ் மாநகர சபை வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றார்கள்.

சில வேளைகளில் அவரது  அரசியல் நிலைப்பாட்டுகள் மாற்றம் பெற்றிருக்கலாம், ஆனால் முழு இலங்கையிலும் இப்படி பல வேட்பாளர்கள் இருப்பார்கள். 

NPPயின் தற்போதய வேட்பாளர்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் விமர்சிப்பதை விட சிந்தித்து செயற்பட வேண்டுமென பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version