விளையாட்டு

GT vs RR LIVE Score: ஆதிக்கத்தை தொடருமா குஜராத்… ராஜஸ்தானுடன் இன்று மோதல்!

Published

on

Loading

GT vs RR LIVE Score: ஆதிக்கத்தை தொடருமா குஜராத்… ராஜஸ்தானுடன் இன்று மோதல்!

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்றுபுதன்கிழமை இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைப்பெறும் 23-வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: GT vs RR LIVE Cricket Score, IPL 2025நடப்பு தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி, ஒரு போட்டியில் மட்டும் தோல்வி பெற்றுள்ள குஜராத் 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் 4 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. லீக் சுற்றில் இந்த இரு அணிகள் ஆடிய கடைசி போட்டிகளில் வென்று இருப்பதால், அதே உத்வேகத்தில் இரு அணிகளும் களமாடும். தொடக்கப் போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள குஜராத் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்த முயலும். அதற்கு ராஜஸ்தான் முட்டுக்கட்டை போட முடியுமா? என்பது இன்று தெரிந்து விடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. நேருக்கு நேர் ஐ.பி.எல்-லில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் 6 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 6 போட்டிகளில் குஜராத் 5 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version