பொழுதுபோக்கு
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன்: சர்ச்சையில் சிக்கிய போஸ்டர்; இதுவும் காப்பியா?
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன்: சர்ச்சையில் சிக்கிய போஸ்டர்; இதுவும் காப்பியா?
ஜவான் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறிய இயக்குனர் அட்லி அடுத்து தனது 6-வது படமாக அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடிப்பில், தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்து அட்லி இயக்கத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டது.பிகில் படத்திற்கு பிறகு தமிழில் படம் இயக்காத அட்லி, பாலிவுட்டில், ஷாருக்கான நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கினார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான இந்த படம் ரூ1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரிய வெற்றிப்படமாக மாறியது. இதன் மூலம் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக வளர்ந்துள்ள அட்லி, அடுத்து யார் படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.அவரது அஸ்தான ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டுள்ளதால், அடுத்து அல்லு அர்ஜூன் நடிப்பில் அட்லி படம் இயக்குனர் என தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் பட நிறுவனம் ளெியிட்டிருந்தது.சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம், ஸ்பேஸ் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் போஸ்டர் ஹாலிவுட்டில் வெளியான டூன் படத்தின் போஸ்டரை போலவே இருக்கிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதை வைத்து அட்லி படம் என்றாலே அதில் பல படங்களின் காப்பி இருக்கும் தற்போது போஸ்டரும் காபி என்று கூறி வருகின்றனர்.இதுவரை 21 படங்கள் நடித்துள்ள அல்லு அர்ஜூன் அட்லி இயக்கத்தில் நடிக்கும் படம் 22-வது படமாகும். இதனை குறிக்கும் வகையில் ஏஏ22*ஏ6 என்ற ஹேஸ்டேக்குடன் சன்பிச்சர்ஸ் நிறுவனம் இந்த போஸ்டரை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.