இலங்கை
அனலைதீவின் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ஹரிணியை சந்தித்த பிரித்தானியாவில் வசிக்கும் பத்மநாதன்
அனலைதீவின் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ஹரிணியை சந்தித்த பிரித்தானியாவில் வசிக்கும் பத்மநாதன்
தீவகமான அனலைதீவினை முழுமையாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பிரித்தானியாவில் வசிக்கும் எமது திரு பத்மநாதன், பாராளுமன்ற அலுவலகத்தில் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேற்படி சந்திப்பு எனது ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற அமைந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், அவசர வேலை காரணமாக யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு செல்ல வேண்டியிருந்ததால், நேரடியாக இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதிருந்தேன்.
இச்சந்திப்பு, அனலைதீவிற்கு தொடர்ச்சியான மற்றும் திடமான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்காக ஒரு முக்கியத்துவமான படியாக அமையும் என நம்புகிறேன். தீவக அபிவிருத்தியில் எனக்கும் பல விருப்பங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளன.
எனவே, தீவகத்தின் நலனுக்காக நடைபெறும் அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் எனது முழுமையான பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் தேசிய மக்கள் சக்தியின் அரசினூடாக வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை