சினிமா

இயக்குநர் ஆதிக்கு 10 பவுன் செயினைக் கொடுங்கப்பா..! என்னமா எடுத்திருக்கிறாரு கதைய..!

Published

on

இயக்குநர் ஆதிக்கு 10 பவுன் செயினைக் கொடுங்கப்பா..! என்னமா எடுத்திருக்கிறாரு கதைய..!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே எப்பொழுதும் தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் அஜித். அத்தகைய அஜித்தின் நடிப்பில் இன்று வெளியான படம் தான் “குட் பேட் அக்லி”.  இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மட்டுமல்லாது திரைப் பிரபலங்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டுள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய உணர்வுகளை சமூக ஊடகங்கள் மற்றும் நேர்காணல்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.”குட் பேட் அக்லி” படத்தைப் பார்த்த ரசிகர்கள், “படம் ஆரம்பித்திலிருந்து அதிரடியாக காணப்பட்டது. ஒரு கணமும் சலிப்பில்லாமல், பரபரப்பாக கதை நகர்கின்றது. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கதையின் ஓட்டம் சிறப்பாக இருந்தது” எனக் கூறியுள்ளனர்.இந்த வெற்றிக்கு காரணமான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் பணி மிகவும் சிறப்பானது என்றும் கூறியுள்ளனர். மேலும் “ஆதிக் இந்த படத்தை உண்மையான ரசிகனாக எடுத்திருக்கின்றார். அவர் அஜித் மீது கொண்டுள்ள அன்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகின்றது.” எனவும் தெரிவித்தனர்.அத்துடன் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் இணைந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 10 பவுன் தங்கச் செயினை அன்பளிப்பாக வழங்க திட்டமிட்டுள்ளனர். இது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version