இலங்கை

எந்த சட்டம் அனுமதி வழங்கியது ? யாழ் வீதி திறப்பில் சுமந்திரனுக்கு சந்தேகம்!

Published

on

எந்த சட்டம் அனுமதி வழங்கியது ? யாழ் வீதி திறப்பில் சுமந்திரனுக்கு சந்தேகம்!

   யாழ்ப்பாணம் பலாலி வீதி 35 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏசுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

Advertisement

கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம்.

ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா?

இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை.

Advertisement

மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதிவழங்கியது.

ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை.

அதனை விட முக்கியமான கேள்வி ?

Advertisement

தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? எனவும் சுமந்திரன் பதிவிட்டுள்ளார்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version