இலங்கை

தந்தை எரித்துக்கொலை; சிக்கிய மசாஜ் நிலைய யுவதி; விசாரணையில் பகீர் தகவல்!

Published

on

தந்தை எரித்துக்கொலை; சிக்கிய மசாஜ் நிலைய யுவதி; விசாரணையில் பகீர் தகவல்!

அநுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கடத்திச் சென்று தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் மசாஜ் நிலைய பணிப்பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

Advertisement

மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாத்தாண்டி , எப்பாவல மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 26, 28 மற்றும் 36 வயதுடைய மூன்று இளைஞர்களும் வாரியப்பொல பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய மசாஜ் நிலைய பணிப்பெண்ணும் ஆவார்.

கொலை செய்யப்பட்டவர், மசாஜ் நிலைய பணிப்பெண்ணின் நிர்வாண காணொளிகளை தம்வசம் வைத்திருந்து, பெண்ணை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version