டி.வி

திருமண கொண்டாட்டத்தில் பிக்பாஸ் காதல் ஜோடி..!

Published

on

திருமண கொண்டாட்டத்தில் பிக்பாஸ் காதல் ஜோடி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோவின் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்து கொண்ட பவானி முன்னர் சீரியல் நடிகையாக ரசிகர்களை கொண்டிருந்தார். அதே சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்ற அமீர் இவரை காதலித்து வந்தார். அதன் பின்னர் இருவரும் ஒரே வீட்டில் நீண்ட காலங்களாக இணைந்து வாழ்ந்து வந்தனர்.இந்த ஆண்டு காதலர் தினத்தன்று தங்களது திருமண நாளை ஏப்ரல் 20 என மிகவும் மகிழ்ச்சியுடன் வீடியோ பதிவு ஒன்றுடன் அறிவித்து இருந்தனர். திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நேரத்தில் பவானி ஒரு சில மேக்கப் மற்றும் திருமணத்திற்கு தயாராகும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றார்.இந்த விடியோக்களிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில் தற்போது சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பவானி பேசியல் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். நிறைய வயது இடைவெளியில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் போன்ற விமர்சனங்களை தாண்டி இவர்கள் இருவரும் மிகவும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் திருமணத்திற்கு தயாராகி வருவது பாராட்டத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version