பொழுதுபோக்கு

பெருசு முதல் ஸ்வீட் ஹார்ட் வரை: இந்த வர ஒடிடி ரிலீஸ் எத்தனை படங்கள்?

Published

on

பெருசு முதல் ஸ்வீட் ஹார்ட் வரை: இந்த வர ஒடிடி ரிலீஸ் எத்தனை படங்கள்?

ஒவ்வொரு வாரமும் திரையுலகில் பல புதிய படங்கள் ரிலீசாகி வரும் நிலையில், திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நாளை (11.04.25) எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதை பார்ப்போம்.பெருசுவைபவ் நடிப்பில் வெளியான அடல்ட் காமெடி படமான பெருசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் ஏப்ரல் 11-ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஸ்வீட் ஹார்ட்யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தில், ரியோ ராஜ் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ள இந்த படம், நாளை சிம்பி சவுத்’ ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.சாவாமராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம், நாளை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.கோர்ட்நடிகர் நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷுடன் இணைந்து ‘கோர்ட்’ என்ற படத்தை உருவாகியுள்ளார். இப்படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.சோரி 2இந்தியில் வெளியான திகில் திரைப்படமாக சோரி 2 திரைப்படம், நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.ஹாக்ஸ் சீசன் 4ஹாக்ஸ் சீசன் 4 வெப் தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. முதல் 3 சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 4-வது சீசனுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பைங்கிலிமலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பைங்கிலி திரைப்படம், நாளை சிம்பிளி சவுத், மற்றும் மனோரமா மேக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.பிரவின்கூடு ஷப்புமலையாளத்தில் செவுபின் சாஹிர், பாசில் ஜோசப், செம்பொன் வினோத் நடிப்பில் வெளியான த்ரில்லர் திரைப்படமாக பிரவின்கூடு ஷப்பு நாளை சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.தி லெஜண்ட் ஆஃப் ஹனுமான் சீசன் 6அனிமேஷன் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தி லெஜண்ட் ஆஃப் ஹனுமான் சீசன் 6 ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version