இலங்கை

மட்டக்களப்பில் இரவோடிரவாக ஜனாதிபதி அநுரவை தூக்கி சென்ற பொலிஸார்!

Published

on

மட்டக்களப்பில் இரவோடிரவாக ஜனாதிபதி அநுரவை தூக்கி சென்ற பொலிஸார்!

  இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக வரும் சனிக்கிழமை (12) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் வருகையை அறிவிக்கும் பதாகைகள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது எனும் அடிப்படையில்,

நேற்று இரவு மாவட்ட பொலிஸாரினால் பதாகைகள அகற்றும் பணிகள் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.சுபியான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலக தேர்தல் கண்காணிப்பு குழு உயர் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version