இலங்கை

யாழ்ப்பாணம் பலாலி ஊடாக கே.கே.எஸ் வரை செல்லும் பேருந்து; மக்கள் மகிழ்ச்சி

Published

on

யாழ்ப்பாணம் பலாலி ஊடாக கே.கே.எஸ் வரை செல்லும் பேருந்து; மக்கள் மகிழ்ச்சி

 யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக இன்றைய தினம் (10)  திறக்கப்பட்டதை அடுத்து, காங்கேசன்துறை – பலாலி – யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் குறித்த வழித்தட பேருந்துகள் வசாவிளான் சந்தியில் அமைந்திருந்த இராணுவத்தின் வீதி தடையுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்திக்கொண்டன.

Advertisement

தற்போது பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளமையால் , இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை – பொன்னாலை வீதியை சென்றடைந்து , அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும் கூறப்படுகின்றது.

அதன் மூலம் பலாலி வடக்கு , அந்தோணி புரம் , மயிலிட்டி மக்கள் குறித்த பேருந்து சேவை ஊடாக இலகுவாக யாழ்ப்பாண நகர் பகுதிக்கு தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும்.

அதேவேளை இன்னமும் ஓரிரு நாட்களில் நேர அட்டவணைகள் தயார் ஆனதும் , பேருந்து சேவைகள் இடம்பெறும் என 764ம் இலக்க வழித்தட , தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version